×

மயோனைஸ்

தேவையான பொருட்கள் : .

முட்டை-2
மிளகு-1 ஸ்பூன்
பூண்டு-4 பற்கள்
எண்ணெய் -6 -8 ஸ்பூன்
எலுமிச்சை-1/2 பழம்
சர்க்கரை-1 ஸ்பூன்

செய்முறை

ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். லெமனை பிழிந்து லெமன் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் கிண்ணத்தில் இருக்கும் முட்டைகளை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ள வேண்டும். மிக்சி ஜாரில் மிளகு, பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த பேஸ்ட்டில் சுமார் 4 ஸ்பூன் அளவிற்கு ரீபைண்ட் ஆயில் ஊற்றி, மீண்டும் மிக்சியை 2 சுற்று சுற்றி எடுக்க வேண்டும். பின் இப்போது பிழிந்து வைத்துள்ள லெமன் ஜூஸ் மற்றும் 2 ஸ்பூன் ரீபைண்ட் ஆயில் சேர்த்து மீண்டும் மிக்சி 2 சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். (எண்ணெய் சேர்ப்பதால் முட்டையானது கெட்டியான பதத்திற்கு மாறும்)இப்போது அரைத்த பேஸ்ட்டில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் இருக்கும் அளவிற்கு வந்த உடன், கிரீமியாக இருக்கும். இந்த கிரீமி பேஸ்டை நன்றாக ஒரு பீட்டர் வைத்து பீட் செய்து, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சூப்பரான மயோனைஸ் ரெடி!

The post மயோனைஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்